நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி +2 இயற்பியல் தேர்வில் இருமுறை தோல்வி!

Update: 2024-08-02 15:40 GMT

நீட்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குஜராத் கல்வி வாரியம் நடத்திய 12-ம் வகுப்பு இயற்பியல் துணைத் தேர்வில் இருமுறை தோல்வி அடைந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

நீட் தேர்வு முடிவில் இயற்பியலில் 99.89, வேதியியலில் 99.86 மற்றும் உயிரியலில் 99.14 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் அந்த மாணவி, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு துணைத் தேர்வில் 700-க்கு 352 மதிப்பெண்களை மட்டுமே பெற்றிருக்கிறார்

மாணவியின் நீட் மதிப்பெண்ணிலும், 12-ம் வகுப்பு துணைத் தேர்விலும் உள்ள இந்த முரண்பாடு, குஜராத் கல்விமுறை மீது பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது

மாணவியின் தந்தை மருத்துவர் என்பதும் வருகைப்பதிவு கட்டாயம் இல்லாத பள்ளியில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி பள்ளிப் படிப்பை முற்றிலும் புறக்கணித்து, நீட் தேர்வு பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

அந்த மாணவியுடன் தொடர்புடைய ஆசிரியர் ஒருவர், கடந்த சில ஆண்டுகளாக குஜராத் கல்வி முறையில் ஏற்பட்ட சில மாற்றங்களே இதற்கு காரணம் என்றும், இது தொடர்பான விமர்சனங்களால் மாணவி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார்.

Tags:    

Similar News