அணி மாறும் எண்ணமே தனக்கு கிடையாது - பவன் கல்யாண் திட்டவட்டம் !
Update: 2024-06-05 11:43 GMT
பவன் கல்யாண்
அணி மாறும் எண்ணமே தனக்கு கிடையாது என்று ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனசேனா கட்சி, நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாகை சூடியது. இதனிடையே மத்தியில் ஆட்சியமைக்க இந்தியா கூட்டணி முனைப்பு காட்டி வரும் நிலையில், கூட்டணிக்கு வருமாறு சந்திரபாபு நாயுடுவிடமும், நிதிஷ்குமாரிடமும் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் பேசத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், பவன் கல்யாண் அதனை மறுத்துள்ளார். அணி மாறும் எண்ணமே தனக்கு கிடையாது என்றும், தனது வாழ்க்கையில் எப்போதுமே இரட்டை நிலைப்பாடு இருந்ததே இல்லை என்றும், திட்டவட்டமாக கூறி உள்ளார்.