டெல்லியில் பெய்த கன மழை - பாதிப்படைந்த மக்கள் இயல்பு வாழ்க்கை !!
By : King 24x7 Angel
Update: 2024-07-24 07:23 GMT
கன மழை
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை கன மழை பெய்த நிலையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
அதேபோல் நொய்டா பகுதியிலும் கனமழை பெய்தது. இதற்கிடையே டெல்லிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் அரியானா பஞ்சாப் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.