நான் இருப்பது சிபிஐ கஸ்டடியில் இல்லை பாஜகவின் கஸ்டடியில்! - கவிதா குற்றச்சாட்டு
Update: 2024-04-15 10:25 GMT
நான் இருப்பது சிபிஐ கஸ்டடியில் இல்லை பாஜகவின் கஸ்டடியில் என BRS கட்சித் தலைவர் கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தலைவர்கள் வெளியில் பேசுவதையே சிபிஐ அதிகாரிகள் தன்னிடம் மீண்டும் கேட்கின்றனர் என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்கு பிறகு BRS கட்சித் தலைவர் கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏப்ரல் 23 வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது.