உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது நாடு இந்தியா - குடியரசு தலைவர்!

Update: 2024-06-27 07:00 GMT

திரௌபதி முர்மு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாடாளுமன்றத்தின் 18 வது மக்களவைத் கூட்டத்தொடரின் முதல் கூட்டத் தொடரில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ''வந்தே பாரத் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். நாட்டில் உள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமரின் கிராமப்புற சாலை வசதி திட்டம் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது.

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு 55 கோடி மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என உலக நாடுகள் நம்புகின்றன. '' என தெரிவித்தார்.

மேலும் குடியரசு தலைவர் உரையின் போது "நீட், நீட்" என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். 

அதற்கு பதிலளித்த அவர், ''போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றியுள்ளது. வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். வினாத்தாள் கசிவு பிரச்சனைகளை களைய கட்சி, அரசியலைத் தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும்" என தெரிவித்தார்.


Tags:    

Similar News