கடந்த 10 ஆண்டுகளில் 27.8 சதவிகிதமாக குறைந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு!
கடந்த 2014 ஏப்ரல் மாதம் முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 60 ரூபாயில் இருந்து 83.31 ரூபாயாக (27.8 சதவிகிதமாக) குறைந்துள்ளது.
ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் சரிவடைந்துள்ளது.
பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் வலுவடைந்ததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக (304 பில்லியன் டாலர்களிலிருந்து 645 பில்லியன் டாலர்கள் வரை) அதிகரித்து இருக்கிறது.
ரூபாயின் மதிப்பு சரிவு இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை இது தெளிவுபடுத்துவதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.