இந்தியப் பங்குச் சந்தை: 'வாலட்டிலிட்டி இன்டெக்ஸ்(VIX)' குறியீடு 25% உயர்வு!
Update: 2024-08-05 17:00 GMT
இந்தியப் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் கணக்கிடும் 'வாலட்டிலிட்டி இன்டெக்ஸ்(VIX)' குறியீடு 25% உயர்ந்துள்ளது.
நிஃப்டி-50 குறியீட்டைப் பயன்படுத்தி சந்தையில் வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலிக்கும் VIX குறியீடு, ஒரே நாளில் 25% வரை உயர்ந்து 23.39 புள்ளிகளாக உள்ளது.
BSE சென்செக்ஸ், NSE நிஃப்டி பங்குச் சந்தைகள் காலை முதல் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவதால், முதலீட்டாளர்களுக்கு இதுவரை ரூ.10.24 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.