இந்தியாவில் படித்த இளைஞர்களே வேலையின்மையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: ILO!
Update: 2024-03-30 07:21 GMT
இந்தியாவில் முறையான கல்வி பெறாதவர்களை விட, படித்த இளைஞர்களே பெருமளவில் வேலைவாய்ப்புகள் இன்றி இருப்பதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு(ILO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சுமார் 29.1 சதவீதமாக உள்ளதாகவும், ஆனால் முறையான கல்வி பெறாதவர்களில் 3.4 சதவீதம் பேர் தான் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இளைஞர்களின் வேலையின்மை விகிதம் தற்போது உலக சராசரி விகிதத்தை விட அதிகமாக உள்ளதாக, ILO கூறியுள்ளது.
இந்தியாவின் மோசமான கல்வி, பாடத்திட்டத்தால் ஏற்படும் இந்த ஆபத்தான போக்குகள், காலப்போக்கில் இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகளைத் தடுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.