மன்னிப்பு கேட்ட இர்பான்..! மன்னித்த சுகாதரத்துறை !

Update: 2024-05-31 11:51 GMT

யூடியூபர் இர்பான் 

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து யூடியூபர் இர்பான் வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வீடியோ வெளியிட்டதற்காக அவர் டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநரிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார். அத்துடன் மன்னிப்பு வீடியோ வெளியிடுவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மன்னிப்பு கோரியதை அடுத்து இர்பான் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க சுகாதாரத்துறை முடிவு செய்தது.

யூடியூபர் இர்பான் அளித்த பதில் இர்பான் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வெளிநாடுகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவ துறையின் சார்பில் மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News