மேற்கு வங்கத்தில் முழுமையாக பணிக்கு திரும்ப ஜூனியர் மருத்துவர்கள் முடிவு!!

வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட ஜூனியர் மருத்துவர்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-10-04 11:36 GMT

Doctors Protest

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் ஒருவர் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கியது. பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறிய மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு, டாக்டர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்த போதிலும் மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள் உள்பட தங்களது அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று ஜூனியர் டாக்டர் அமைப்பின் முக்கிய குழு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் இன்று மதியம் நடைபெறும் பேரணிக்குப் பிறகு வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான வேலை நிறுத்தம் திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், மாநில அரசுக்கு அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற காலக்கெடு விதிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். நோயாளிகள் இன்னல்களை சந்திப்பதால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஜூனியர் டாக்டர்களை சஸ்பெண்ட் செய்ய சீனியர் டாக்டர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்கதக்து. ஜூனியர் டாக்டர்கள் 42 நாட்கள் முழு வேலை நிறுத்தம் செய்தனர். மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர்களுடைய போராட்டம் செப்டம்பர் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அப்போது முக்கியமான மருத்துவ சேவை பாதிக்கக்கூடாது என்ற வகையில் முடிவு செய்தனர். பின்னர் அக்டோபர் 1-ந்தேதி மீண்டும் தங்களது வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

Tags:    

Similar News