அனிமேஷன் வீடியோவால் ஆபத்தில் சிக்கிய ஜே.பி நட்டா!
கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பெயரில் 3 முட்டைகள் இருப்பதைப் போன்றும், முஸ்லிம் என்ற பெயரில் மேலும் ஒரு முட்டை சேர்க்கப்பட்டு அதற்கு ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உணவளிப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா தலைவர்கள் மீது காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
அதன்பேரில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா, சமூக வலைதளப்பிரிவு நிர்வாகி அமித் மால்வியா ஆகிய 3 பேர் மீதும் 7 நாட்களுக்குள் பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு கர்நாடக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும் எக்ஸ் நிறுவனத்திடம் கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது.