ஜே பி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு... ஒப்புதல் அளித்தது தேசிய பொதுக்குழு!

Update: 2024-02-19 07:31 GMT

ஜே பி நட்டா

டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே பி நட்டா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2020 ஜனவரி முதல் 2023 ஜனவரி வரை மூன்று ஆண்டுகள் பதவிக்காலத்துடன் பாஜக தேசியத் தலைவர் பதவி ஜே. பி. நட்டாவுக்கு வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அது நீட்டிக்கபட்டு ஜூன் 2024 வரை அவரே தலைவராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று பாஜக அறிவித்தது.

இதனையடுத்து பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் பதவியில் மாற்றம் ஏதும் இல்லை. ஜூன் 2024 வரை ஜே பி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என கட்சியின் தேசிய பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Tags:    

Similar News