இந்தியா கூட்டணிக்கான பட்டனை அழுத்தினால் அவ்வளவுதான்! பிரச்சாரத்தில் மோடி !

Update: 2024-05-13 10:19 GMT

பிரதமர் மோடி

பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று பீகாரில் உள்ள 5 லோக்சபா தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பீகார் ஹஜிபூர் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர் சிரங் பாஸ்வானை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடி, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள குருத்வாராவில் சப்பாத்தி செய்து, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.

அதைத்தொடர்ந்து ஹாஜிப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா கூட்டணி கட்சியினர் மத்தியில் ஆட்சியை பிடித்தால் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை பறித்து விடுவார்கள். பீகாரை முன்னோக்கி கொண்டு செல்ல ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுக்கு விருப்பம் இல்லை. அவர்கள் உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களின் வாரிசுகளைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறார்கள். அவர்ளுக்கு வாக்கு வங்கிதான் முக்கியம். ஆர்.ஜே.டி ஆட்சியில் இருந்தபோது பீகாரில் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அழித்துவிட்டது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் ஊழலில் மூழ்கியுள்ளனர். யாராவது தவறுதலாக ஆர்.ஜே.டி, காங்கிரஸ் அல்லது இந்தியா கூட்டணிக்கான பட்டனை அழுத்தினால், அவருடைய வாக்கு வீணாகப் போவது உறுதி. '' என பேசியுள்ளார்.

Tags:    

Similar News