வேட்புமனு தாக்கல் செய்த கங்கனா ரனாவத் !

Update: 2024-05-14 11:59 GMT

கங்கனா ரனாவத் 

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட பா.ஜனதா வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. 7ம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளானஇன்று பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா ரனாவத் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை தந்திருந்தார். அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாலிவுட்டில் வெற்றிக்கண்டதை போல அரசியலிலும் வெற்றி காண்பேன் என நம்பிக்கையுள்ளதாக தெரிவித்தார். 

Tags:    

Similar News