தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி எம்.பி கோரிக்கை!!

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி எம்.பி கடிதம் ஒன்றை வழங்கினார்.;

Update: 2024-11-27 13:17 GMT
தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி எம்.பி கோரிக்கை!!

Kanimozhi MP & Central Minister Rajnath Singh

  • whatsapp icon

திமுக எம்.பி கனிமொழி இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரையும், குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி கடிதம் ஒன்றை வழங்கிானர். இதுகுறித்து, கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும், குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துக் கேட்டுக் கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News