பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர்: சித்தராமையா

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர். மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்படும் என கர்நாடக முதலமைசர் சித்தராமையா அறிவித்துள்ளார்.;

Update: 2025-03-07 12:32 GMT

Siddaramaiah

மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்தது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 7-ந்தேதி (இன்று) தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி கர்நாடக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 16-வது பட்ஜெட் ஆகும். 2025-2026-ம் ஆண்டுக்கு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள்...  தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை போல் கர்நாடகா முழுவதும் அக்கா உணவகம், அக்கா கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படும். சிறுபான்மை பெண்களுக்காக 2024-25 ஆம் ஆண்டில் காலியாக உள்ள வக்ஃப் நிலத்தில் 15 மகளிர் கல்லூரிகளையும், 2025-26 ஆம் ஆண்டில் மேலும் 16 கல்லூரிகளையும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா, பஞ்சாயத்து அலுவலகங்களிலும் அக்கா உணவகங்கள் திறக்கப்படும். கர்நாடகா முழுவதும் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.200 டிக்கெட் விலையை வசூலிக்கலாம். பெங்களூரு மெட்ரோ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள தேவனஹள்ளி வரை விரிவுபடுத்தப்படும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஹெப்பல் எஸ்டீம் மாலை சில்க் போர்டு சந்திப்பிலிருந்து ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் இணைக்க 18.5 கி.மீ நீளமுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப்பாதையை அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர். மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றம். கன்னட மொழி திட்டங்களை ஊக்குவிப்பதற்காக அரசுக்கு சொந்தமாக OTT தளத்தை தொடங்குவதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.

Tags:    

Similar News