கெஜ்ரிவாலின் அதிரடி.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
Update: 2024-05-30 11:34 GMT
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்னும் 7 நாட்கள் வெளியே இருக்க அனுமதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் 7 கிலோ எடை குறைந்து விட்டதாகவும், மருத்துவ ரீதியாக பல சிகிச்சைகள் எடுக்க வேண்டியுள்ளதாகவும், உடல் நலத்தை காரணம் காட்டி' ஜாமின் நீட்டிப்பு கேட்டுள்ளார்.
மேலும் இந்த மனு மீதான விசாரணை ஜூன் 1-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.