இந்தியாவில் ‘Meta AI’ சாட்பாட் அறிமுகம்!
Update: 2024-06-25 07:07 GMT
இந்தியாவில்மெட்டாநிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டான ‘மெட்டா ஏஐ’ அறிமுகம் ஆகியுள்ளது. இதனை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் பயனர்களின் பயன்பாட்டுக்கு படிப்படியாக இது கிடைக்கப் பெறும் என தெரிகிறது.
தற்போதைக்கு இதனை இந்தியாவில் ஆங்கில மொழியில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
மற்ற ஜெனரேஷன் ஏஐ சாட்பாட்களை போலவே இதிலும் பயனர்கள் பல்வேறு டாஸ்குகளை மேற்கொள்ளலாம். பயனர்கள் இதைக் கொண்டு மின்னஞ்சல் எழுத, கவிதை, மொழிபெயர்ப்பு, டெக்ஸ்டுகளை சுருக்கி தர, இமேஜ் மற்றும் GIF உருவாக்க என பல பணிகளை செய்யலாம். இது அனைத்தையும் பயனர்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தபடி மேற்கொள்ளலாம். கூகுள், மைக்ரோசாஃப்ட் வழங்கும் நிகழ்நேர சேர்ச் ரிசல்ட்களை பயனர்கள் இதில் பெற முடியும்.