ஹிஜாப்பை தூக்கு' 'ஆதார்கார்டை காட்டு' இஸ்லாமிய பெண்களை மிரட்டிய பாஜக வேட்பாளர் !
நாடாளுமன்ற நான்காம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தையும் சேர்த்து 96 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாஜக ஹைதராபாத் வேட்பாளர் கே மாதவிலதா இன்று வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு அதனை சரிபார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் அவர்களது பர்தாவை தூக்க சொல்லி முகத்தை காட்டு என்று இவர் மிரட்டி உள்ளார்.
மேலும் அவர்களின் முகத்தைப் பார்த்த பின்பே வாக்களிக்க அனுமதித்தார். அங்குள்ள இஸ்லாமிய பெண்கள் அனைவர்களிடமும் அதன்படியே ஆதார் கார்டை கேட்டு ஹிஜாபை தூக்கி முகத்தை பார்த்து பின்னரே வாக்களிக்க அனுமதித்துள்ளனர்.
இதற்கு முன்னதாகவே பாஜக வேட்பாளர் கே மாதவிலதா மசூதியை நோக்கி அம்பு எய்த சைகையை காட்டியது பெரிய அளவில் சச்சையானது.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பாஜகவினர் இந்து முஸ்லிம் இடையே பிரிவினை தொடர்பான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகின்றனர். இதனால் பாஜகவினரது ஓட்டு வங்கி பாதிக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.