மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெற்றார்.
மக்களவையில் அதிகாரமிக்க பதவியான சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா தொடர்ந்து 2வது முறையா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஓம் பிர்லாவுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் கை குலுக்கி கொண்டனர். அதனை தொடர்ந்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை இருவரும் அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர்.
குரல் வாக்கெடுப்புக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓம் பிர்லா தேர்வானதாக தற்காலிக சபாநாயகர் அறிவிக்கப்பட்டது குறிபிடத்தக்கது.