'மதரஸா கல்வி வாரியச் சட்டம்' - உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!

Update: 2024-04-05 10:58 GMT

உச்சநீதிமன்றம் 

உத்தரப் பிரதேசத்தின் 'மதரஸா கல்வி வாரியச் சட்டம்' செல்லாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

''மதரஸா சட்டத்தை உயர்நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதரஸா சட்டம் மதக்கல்வி கற்பிப்பது தொடர்பான எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை.

மதரஸாக்களை ஒழுங்குப்படுத்துவதே மதரஸா கல்வி வாரியச் சட்டத்தின் நோக்கமாகும்.

மதரஸாக்களை ஒழுங்குபடுத்த உத்தரவு பிறப்பிக்கலாம்; அதற்காக மதரஸாக்கள் சட்டத்தையே ரத்து செய்து செல்லாது என தீர்ப்பளிக்க முடியாது'' என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News