பிரியங்கா காந்திக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி பிரசாரம்!
Update: 2024-06-22 06:23 GMT
வயநாட்டில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
கொல்கத்தாவில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இதனிடையே மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் காங்கிரஸ் மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.