டெல்லி ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை - இது தான் காரணமா ??

Update: 2024-05-28 06:55 GMT

மம்தா பானர்ஜி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டெல்லியில் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட நாடு முழுவதும் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தாவின் புர்ராபஜாரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய மம்தா இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

ஜூன் 1 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாப் மற்றும் உ.பி.யிலும் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 7ஆம் கட்டத்தில் முக்கியமான தேர்தல் நடைபெற உள்ளது. கொல்கத்தா உள்பட ஒன்பது இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இது மேற்கு வங்கத்தில் இதுவரை பல கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவை விட அதிகம். 2019ல் இந்த ஒன்பது தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். இதனால் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கமுடியாது என கூறியுள்ளார்.

மற்றொரு புறம் மேற்கு வங்கத்தை ரெமல் புயல் தாக்கியுள்ளது. இந்த நேரத்தில் டெல்லியில் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் என் இதயம் பாதிக்கப்பட்ட மக்களுடன் உள்ளது. என்னுடைய முன்னுரிமை மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு தான். நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கு தங்குமிடம், உணவு கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் அன்றைய தினம் வாக்களிக்க உள்ளனர்.

Tags:    

Similar News