இந்திய தேர்தல் பிரச்சாரத்தில் வெடித்த பாகிஸ்தான் குண்டு!

Update: 2024-05-11 06:11 GMT

மணிசங்கர் அய்யர்

சாம் பிட்ரோடாவை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காங்கிரஸ் அயலக அணி தலைவரான சாம் பிட்ரோடா கடந்த தினங்களுக்கு முன்பு தென் இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போலும், கிழக்கு இந்தியர்கள் சீனர்கள் போலும் இருக்கிறார்கள் என்று பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. பிரதமர் மோடி உட்பட பாஜகவினர் இதனை விமர்சித்து கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து சாம் பெற்றோட தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அந்த வகையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் அளித்த பழைய பேட்டியில், ''பாகிஸ்தானுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் குண்டு போடப்படும்'' என கூறியிருக்கிறார். அதனை பாஜக-வினர் தற்போது சாதகமாக்கிக் கொண்டு வைரலாக்கி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ''அனுராக் தாகூர் காங்கிரஸ் தலைவர்கள் இதயம் பாகிஸ்தானுக்கு துடிக்கிறது'' என விமர்சித்துள்ளார். மேலும் அவர் பாகிஸ்தானுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை இந்தியாவுக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் ஒரு பக்கம் சாப்பிட்டாளோவின் பேச்சுக்கும் மணிசங்கர் ஐயரின் பேச்சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் இருந்து வருகின்றனர்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "தகவல் காங்கிரசின் சித்தாந்தம் மற்றும் அரசியல் எல்லாம் வெளிப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் மற்றும் அதன் தீவிரவாத செயல்களுக்காக மன்னிப்பு கோறும் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என கடுமையாக விமர்சித்துள்ளார்."

இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷா இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஜார்கண்டில் நடந்த பிரச்சாரத்தில் மணிசங்கர் பேச்சையும், பாரூக் அப்துல்லா பேச்சையும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

அப்போது பேசியவர், ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசாதீர்கள். காங்கிரஸ் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவோடு இணைப்பது பற்றி பேசாமல் பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருப்பதாக மிரட்டுகிறது'' என குற்றம் சாட்டினார்.

முன்பிருந்தே காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்காக போராடுகிறது. காங்கிரஸ்காக பாகிஸ்தான் தலைவர்கள் அழுகிறார்கள் என பிரச்சாரம் செய்து வந்த பாஜக- வுக்கு பாகிஸ்தானை மையமாக வைத்து காங்கிரசை தாக்குவதற்கு சாதகமாக இந்த பேச்சு அமைந்துள்ளது.

Tags:    

Similar News