''திருமணமான பெண்களுக்கு வேலையில்லை''.. ஆப்பிள் நிறுவனம் பதில்!

Update: 2024-06-27 04:57 GMT

ஃபாக்ஸ்கான்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலையில்லை என்ற விதி இருப்பதாக வெளியிட்ட செய்திக்கு ஆப்பிள்நிறுவனம் பதில் அளித்துள்ளது.

ரியுடர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில், திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்துவதை ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுத் தவிர்த்து வருவதாக கூறியிருந்தது.

கடந்த 2023 மார்ச் மாதத்தில் திருமணமான இரு பெண்கள் சென்னையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தால் நடத்தப்பட்ட வேலைவாய்ப்புக்கான நேர்முக தேர்வுக்காக வந்தபோது, செக்யூரிட்டி அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பட்டதாக ரியுடர்ஸ் குற்றம்சாட்டியது.

இந்த சூழலில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பாலின பாகுபாடு குறித்து பதில் அளித்துள்ள ஆப்பிள் நிறுவனம், தனது சப்ளை செயின் நிறுவனங்கள் நல்ல நடைமுறைகளை பின்பற்றுவார்கள் என தெரிவித்துள்ளது.

ஃபாக்ஸ்கான் உட்பட தனது அனைத்து சப்ளை செயின் நிறுவனங்களும் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்தும் கொள்கையைப் பின்பற்றுவதை உறுதி செய்யும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News