மோடிக்கு சவக்குழி.. காங்கிரஸ் பேச்சு - மோடி குற்றசாட்டு !

Update: 2024-05-10 11:01 GMT

பிரதமர் மோடி

மகாராஷ்டிராவில் நந்தூர்பார் தொகுதியை தடவ மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சியில் தன்னோடு போட்டியிட முடியாத காங்கிரஸ் பொய் வதந்திகளை பரப்புகிறது என குற்றம் சாட்டினார்.

மேலும் காங்கிரசுடன் இணைந்து அழிந்து போவதற்கு பதிலாக அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் இணைந்து கொள்ளலாம் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னை உயிரோடு புதைக்க வேண்டும் என சிவசேனா பேசுவதாகவும், மோடிக்கு சவக்குழி தோண்டப்படும் என காங்கிரஸ் பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்கிறது என்றும் வாக்குக்காக இதுபோன்று மக்களை கவரும் விதமாக வாக்கு பேசிவருகிறார்கள் எனவும் விமர்சித்தார்.

Tags:    

Similar News