நீட் தேர்வு முறைகேடு - மக்களவை விவாதத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு !!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது ராகுல் காந்தி நீட் தேர்வு முறைகேடு பற்றி குற்றம் சாட்டி பேசியது ; நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்று இருப்பது நாடு முழுவதும் அறிந்த செய்தியாக உள்ளது.
ஆனால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த பிரச்சனைகளுக்கு தன்னைத் தவிர மற்ற அனைவரும் மீதும் குற்றம் சாட்டி வருகிறார். நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது, என்ற கவலையுடன் உள்ளன.
இந்தியாவில் நீட் தேர்வு முறை மோசடியானது என்று நம்பத் தொடங்கியுள்ளனர். உங்களிடம் அதிகம் பணம் இருந்தால் இந்தியாவின் தேர்வு மையத்தை விலைக்கு வாங்கிடலாம் என்று மக்கள் தற்போது நம்புகிறார்கள். அதையே எதிர்த்தரப்பில் உள்ள நாங்களும் கருதுகிறோம்.
நீட் மட்டும் இல்லாமல் அனைத்து முக்கிய போட்டி தேர்வுகளிலும் தேர்வு முறைகள் சிக்கல் உள்ளது. நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரிகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்த விவாதங்களுக்கு பதில் கொடுத்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது; உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தேர்வு முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முறை கேட்டு நான் அரசியலாக விரும்பவில்லை ஆனால் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது எத்தனை முறை வினாத்தாள் முறை கேட்டு நடந்திருக்கிறது, என்பதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர். ஓரிரு இடங்களில் மட்டும் தான் நீர் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டுமொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பு ஏற்கும், தற்போது நடந்த சிறு பிழைகள் கூட இனி நடக்காது என மத்திய அரசு உறுதி அளிக்கிறது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் மக்கள் அவையில் நீங்கள் கோஷம் எழுப்புவதால் அது உண்மையாகி விடாது என்று தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.