நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் ; 4 - MBBS மாணவர்களிடம் விசாரணை !!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே ஐந்தாம் தேதி நடந்தது. இதன் முடிவு ஜூன் 4-ம் தேதி வெளியான நிலையில் தேர்வுக்கு முன் வினாத்தாள் கசிந்தது ஆள்மாறாட்டம் நடந்தது என பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த 4 இளநிலை மருத்துவ மாணவர்களை சிபிஐ தடுப்பு காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த நீட் தேர்வு வினாத்தாளை வெளியிட்ட முக்கிய குற்றவாளியான இன்ஜினியர் பங்கஜ்குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ராஜசிங் ஆகிய இருவரையும் கடந்த 16ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களையும் சேர்த்து நீட் முறைகேடு விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது.
இதே போல் பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. ஜார்கண்ட், குஜராத் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது. தெரியவர இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.