நிபா வைரஸ் தோற்று - கேரள மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த நோய் தடுப்பு விதிமுறைகளை தளர்த்த முடிவு !!
By : King 24x7 Angel
Update: 2024-07-29 06:46 GMT
கேரளாவில் நிபா வைரஸ் தோற்று அதிகரித்த நிலையில் நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட சிறுவனின் பட்டியலில் 472 பேர் இருந்தனர். அவர்களின் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நிபா வைரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் கேரள மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த நோய் தடுப்பு விதிமுறைகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிபா வைரஸ் ஆய்வு கூட்டத்தில் இதனை முடிவு செய்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சமூகஇடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு விடுத்துள்ளனர்.