நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன்..! பட்ஜெட் தாக்கல் எப்போது!
மோடி 3.0 அரசாங்கத்தில், நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களின் முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய நிதி அமைச்சராக முறைப்படி தனது அலுவலகத்தில் இன்று நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இரண்டாவது முறையாக நிதியமைச்சராக பதவி ஏற்று கொண்ட நிர்மலா சீதாராமனுக்கு நிதி அமைச்சருக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இவரின் நிதியமைச்சக பதவி காலத்தில் அடிப்படை கார்ப்பரேட் வரி 30% முதல் 22% வரை குறைக்கப்பட்டது. கோவிட் தொற்றுநோய் காலத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10%க்கு சமமான ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரப் பேக்கேஜை அவர் அறிவித்து கவனம் ஈர்த்தார்.
நிதிப்பற்றாக்குறை நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% ஆக இருக்கும் என்ற என முந்தைய மதிப்பீட்டில் இருந்து 5.6% ஆகக் குறைத்துள்ளார் நிர்மலா. பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரீஃப்கேஸுக்குப் பதிலாக பையை அறிமுகம் செய்தார்.
தற்போது இரண்டாவது முறையாக நிதியமைச்சராக பதவி ஏற்று கொண்ட நிர்மலா சீதாராமன் ஜூலை 22இல் 2024-25 நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.