நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை - மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் !!

Update: 2024-07-22 07:13 GMT

தர்மேந்திர பிரதான் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாராளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு குறித்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், திமுக எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பிய நிலையில்  நீட் தேர்வு முறைகேடால் 24 லட்சம் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். நீட் முறை கேட்டுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் நீட் தேர்வில் ஏழு ஆண்டுகளாக வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை ஐந்து கோடி மாணவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நீட் தேர்வு எழுதி உள்ளனர். ஏழு ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை 4700 தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளது. நீட் முறை கேடு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News