"இப்போது தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" - வெட்கத்துடன் ராகுல் காந்தி !

Update: 2024-05-13 11:03 GMT

ராகுல் காந்தி 

உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ''ரேபரேலி மக்கள் ஜவஹர்லால் நேருவுக்கு அரசியல் கற்றுத் தந்தார்கள். உங்களுக்காக நான் போராடுவேன்.'' என்று கூறினார்.

மேலும் பிரதமரின் சம்பளம் ரூ. 2.5 லட்சம். தினமும் லட்ச ரூபாய் மதிப்புள்ள சூட்களை அவர் எப்படி அணிகிறார் என்பது தெரியவில்லை என கேள்வி எழுப்பினார்.

53 வயதாகும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் எப்போது திருமணம் என தலைவர்களும், மக்களும் கேட்பது தொடர் கதையாக இருக்கிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி வாக்காளர்கள் எப்போது திருமணம் என பாசமாக கேட்டபோது அதற்கு, இப்போது தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி சிரித்துக்கொண்டு சென்றார்.

Tags:    

Similar News