'இப்ப பாருங்க சார் கேமரா ஆஃப் பண்ணுவாங்க' - ராகுல் காந்தி

Update: 2024-07-29 11:00 GMT

ராகுல் காந்தி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பட்ஜெட்டிற்கு முன்பாக நிதியமைச்சர் அல்வா கிண்டிய போட்டோ காண்பித்த பொழுது கேமரா ஆஃப் ஆனதால் சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் ராகுல்காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ''பட்ஜெட்டுக்கு முன் அல்வா தயாரிக்கும் நிகழ்வில் கூட பழங்குடியினர், ஒபிசி பிரிவினர், சிறுபான்மையினர் ஒருவரும் இல்லை. நாட்டு மக்களுக்கு அல்வா கொடுப்பதற்காக 20 பேர் இணைந்து பட்ஜெட் தயாரித்துள்ளனர். ஆனாலும் மத்திய அரசின் பட்ஜெட் அல்வா பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை. 

எனது பேச்சைக் கேட்டு பாஜகவினர் சிரித்தாலும் உள்ளுக்குள் ஒருவித அச்சத்தில்தான் உள்ளனர். மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ மாட்டிக் கொண்டதைப் போல, மோடி ஆட்சியில் நாடு மாட்டிக் கொண்டுள்ளது. இந்தியாவை கவ்விப் பிடித்துள்ள சக்கர வியூகத்தில் 3 சக்திகள் உள்ளன. இந்தியாவில் உதித்துள்ள சக்கர வியூகம் தாமரை வடிவத்தில் வந்துள்ளது.

அரசியல் ஏகாதிபத்தியமும் நாட்டின் கட்டமைப்பை நாசமாக்குகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவை எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக மோடி ஆட்சி பயன்படுத்தி வருகிறது. ஒன்றிய பட்ஜெட்டில் கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கல்விக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்க்கப்படுபவர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஓய்வூதியமாக வழங்கப்படுவது இல்லை. மோடி அரசு என்பது வேலைவாய்ப்பின்மை மற்றும் வினாத்தாள் கசிவின் அர்த்தமாக மாறிவிட்டது. ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அழிகின்றன. ஜிஎஸ்டி மூலம் வரி பயங்கரவாதத்தை ஒன்றிய அரசு ஏவியுள்ளது.'' என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News