நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் - பிரதமர் மோடி

Update: 2024-07-22 06:40 GMT

பிரதமர் மோடி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாட்டின் நலனுக்காக, எதிர்க்கட்சிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. அப்போது பேசிய பிரதமர் மோடி, '' மூன்றாவது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.. தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு எங்கள் அரசுக்கு திசையை காட்ட உள்ளது. அமுத காலத்தில் தாக்கல் செய்யப்படும் மிக உன்னதமான பட்ஜெட் இது. வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவது எங்களது கனவு.

மற்ற முன்னேறிய பொருளாதாரம் கொண்ட நாடுகளை விட, மிக வேகமாக இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற எங்களது தொலைநோக்குத் திட்டத்திற்கு இந்த பட்ஜெட் அடித்தளம் அமைக்கும். நாடாளுமன்றத்தின் கௌரவத்தை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்வோம். தேசத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல இந்த மேடையை, எதிர்க்கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.'' என தெரிவித்தார்.

Tags:    

Similar News