ஆந்திரப் பிரதேச மாநில துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார் பவன் கல்யாண்!

Update: 2024-06-19 11:00 GMT

பவன் கல்யாண்

ஆந்திரப் பிரதேச மாநில துணை முதல்-மந்திரியாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பொறுப்பேற்றுக்கொண்டார்.

2024 ஆந்திர பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தலில், ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் - சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (Telugu Desam Party) நேரடியாக ஆட்சிக்காக அரசியல் மோதலில் ஈடுபட்டன. நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்குபதிவின் அடிப்படையில் தெலுங்குதேசம் - பவன் கல்யாணின் (Jana Sena) ஜனசேனா - பாஜக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

Advertisement

இதனையடுத்து சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன.

அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராகவும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல்; சுற்றுச்சூழல், காடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் இன்று (19-06-24) ஆந்திராவில் உள்ள துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.  

Tags:    

Similar News