இன்று மாலை ஆந்திரா செல்கிறார் பிரதமர் மோடி!!
இன்று மாலை ஆந்திரா செல்லும் பிரதமர் மோடி அங்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று விமானம் மூலம் மாலை 4.15 மணிக்கு விசாகப்பட்டினம் செல்கிறார். அங்கிருந்து அனக்காபள்ளி மாவட்டம், அச்சுதாபுரம் அருகே ரூ.1.85 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் ரூ.19.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட 6 சாலைகள் மற்றும் ரெயில் பாதை அமைப்பதற்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மாலை 4.45 மணி முதல் 5.30 மணி வரை ஆந்திர பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்- மந்திரி பவன் கல்யாண், ஆந்திர பிரதேச பா.ஜ.க. தலைவர் புரந்தேரேஸ்வரி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். பின்னர் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து வெங்கடாதிரி வண்டில்லுவில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்துகிறார். ரோடு ஷோ முடித்துக் கொண்டு 6.50 மணிக்கு புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். விமான நிலையத்தில் 7.15 மணிக்கு கிளம்பி புவனேஸ்வர் செல்கிறார்.