பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உரையாடல்
பிரதமர் மோடி உக்ரைன் பயணம் மேற்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் காணொளி வாயிலாக உரையாடினார்.
இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் உக்ரைன் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான செய்தியில், ``பிரதமர் மோடியின் சமீபத்திய போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தைப் பற்றி விவாதிக்க நான் அவருடன் தொலைபேசியில் உரையாடினேன். மேலும் உக்ரைனுக்கான அவரின் அமைதி செய்திக்காகவும், மனிதாபிமான ஆதரவுக்காகவும் அவரைப் பாராட்டினேன். இந்தோ - பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்புக்காக இணைந்து பணியாற்றுவதற்கான எங்கள் நிலைபாட்டை உறுதிப்படுத்தினோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.