கூகுள் இந்தியாவின் மேலாளர் மற்றும் துணைத் தலைவராக ப்ரீத்தி லோபனா நியமனம்!!
கூகுள் இந்தியாவின் புதிய நாட்டு மேலாளர் (new country manager) மற்றும் துணைத் தலைவராக ப்ரீத்தி லோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.
By : King 24x7 Desk
Update: 2024-12-19 08:08 GMT
கூகுள் இந்தியாவின் புதிய நாட்டு மேலாளர் (new country manager) மற்றும் துணைத் தலைவராக ப்ரீத்தி லோபனா நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் கூகுள் நிறுவன தலைவராக இருந்த சஞ்சய் குப்தாவுக்குப் பதிலாக, இந்தியாவுக்கு மட்டும் புதிதாக ப்ரீத்தி லோபனாவை மேலாளர் மற்றும் துணைத் தலைவராக கூகுள் நியமித்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ப்ரீத்தி லோபனா, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.