சிங்கப்பூருக்கு செல்லும் பிரதமர் மோடி !

Update: 2024-09-03 07:00 GMT

பிரதமர் மோடி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரசு முறை பயணமாக 3 நாட்கள் புருனே, சிங்கப்பூருக்கு செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, இந்தியா – புரூணேய் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை மேம்படுத்துவது குறித்து விவாதமும் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், இந்தியா – புரூணேய் இடையே விண்வெளித் துறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

புருனே நாட்டிற்கு அரசுமுறை பயணமாக செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். புருனே பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் 2 நாட்கள் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூரில் தொழில் மற்றும் வணிகத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

Tags:    

Similar News