அரசுமுறை பயணமாக போலந்து நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு புறப்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசுதுறை பயணமாக இன்று போலந்து செல்கிறார். அங்கு, அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார். போலந்து-இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மோடி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் 1979ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன் பின்னர் போலந்து செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை இந்த பயணத்தின் மூலம் நரேந்திர மோடி பெறுகிறார்.
போலந்திற்கு 2 நாள் செல்லும் பிரதமர் அடுத்து அங்கிருந்து ரயிலில் 10 மணி நேரம் பயணித்து 23ஆம் தேதி உக்ரைன் செல்கிறார். தலைநகர் கீவில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து பேசும் பிரதமர் மோடி ரஷ்யாவுடன் நீடித்து வரும் போருக்கு அமைதியான தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்க உள்ளார்.