புருனே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !

Update: 2024-09-04 05:15 GMT

பிரதமர் மோடி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரசு முறைப்பயணமாக புருனே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார்.

இந்தியா - புருனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40ம் ஆண்டையொட்டி பிரதமர் மோடிஅரசு முறைப்பயணமாக இன்று (செப்.,03) காலை புருனே புறப்பட்டு சென்றார். அங்கு புருனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதிக்க உள்ளார். இதன்மூலம் புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ''நமது இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளை எதிர்நோக்குகிறோம். குறிப்பாக, வணிக, கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவதில் ஆவலுடன் உள்ளேன்’’ என பதிவிட்டார்.

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தங்கும் ஓட்டலுக்கு வந்த இந்திய வம்சாவளியினர் அங்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மாலையில், இந்திய தூதரகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்த மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.

Tags:    

Similar News