என் மக்களை நிறத்தைக் கொண்டு அவமதிப்பதா? சுயமரியாதைக்காக கூட்டணியை முறிக்குமா திமுக... பிரதமர் மோடி கடும் கண்டனம்! பதவி விலகிய சாம் பிட்ரோடா..!
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளனர் என்ற காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடாவின் சர்ச்சை பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் விதித்த நிலையில் சாம் பிட்ரோடா தற்போது ராஜினாமா செய்துள்ளார். மேலும் பிரதமர் மோடி திமுக அரசுக்கு தமிழகத்தின் சுயமரியாதையை காக்க காங்கிரஸ் உடன் கூட்டணியை முறிக்க தயாரா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக இருந்தவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சாம் பிட்ரோடா தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது, " பல்வகைத் தன்மை கொண்ட இந்தியா உலகின் ஜனநாயகத்துக்கு ஓர் சிறந்த உதாரணம். நாட்டின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ள மக்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள்." என்று பேசியுள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் விதித்த பிரதமர் மோடிராஜம் பேட்டையில் நடைபெற்ற பொது கூட்டத்தில், " சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு கடும் கண்டனம். சாம் பிரோடாவின் இனவெறி மனப்பான்மையை நாங்கள் ஏற்க மாட்டோம். என் மீதாவது ஒருவர் வீசப்படும் போது நான் பொறுத்துக் கொள்வேன் ஆனால் என் மக்கள் மீது அவதூறுகள் வீசப்படும் போது என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது, தோல் நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை எனது நாடு பொறுத்துக்கொள்ளாது.'' எனத் தெரிவித்தார்.
மேலும், '''ஷேஜாதா'வின் (ராகுல் காந்தி) தத்துவ வழிகாட்டியான (சாம் பிட்ரோடா) அங்கிள் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார். கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவரைப் போலவே இந்த 'ஷேஜாதா'வும் அமெரிக்காவில் இருக்கும் அந்த தத்துவ வழிகாட்டி மாமாவின் கருத்தைத்தான் ஏற்றுச் செயல்படுத்துகிறார். பழங்குடியினப் பெண்ணான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் ஏன் அவ்வளவு முயற்சி செய்தது என்பது இன்றுதான் தெரிகிறது. 'கறுப்பு தோல் கொண்டவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்' எனக் கூறி இருக்கிறார். இதைத்தான் அப்போதும் காங்கிரஸ் பிரதிபலித்திருக்கிறது. '' என விமர்சனம் செய்துள்ளார்.
இதனையடுத்து சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி திமுக அரசுக்கு தமிழகத்தின் சுயமரியாதையை காக்க காங்கிரஸ் உடன் கூட்டணியை முறிக்க தயாரா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.