வாரணாசியில் 3 வது முறையாக களமிறங்கும் பிரதமர் மோடி !

Update: 2024-05-06 07:29 GMT

பிரதமர் மோடி

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தற்போது வரை 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இதனையடுத்து 3 ஆம் கட்ட தேர்தல் நாளை மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி, தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார். அத்தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மே 13-ந் தேதியன்று ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார்.

வாரணாசி தொகுதியானது 1952 முதல் 1962 வரை காங்கிரஸ் வசம் இருந்தது. 1967-ல் சிபிஎம் கட்சி வென்றது. 1971-ல் காங்கிரஸ், 1977-ல் ஜனதா கட்சி, 1980, 1984-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதன்பின்னர் 2014-ல் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வென்று நாட்டின் பிரதமரானார். 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.

Tags:    

Similar News