பிரதமர் மோடியின் முதல் கையெழுத்து !
பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில், டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி.
பதவியேற்றதுமே விவசாயிகளுக்கான நிதி வழங்கும், PM KISAN FUND திட்டத்தின் கீழ், 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 நிதியை விடுவிக்க முதல் கையெழுத்திட்டார்.
பதவியேற்பு விழாவின்போது கடந்த 2014ம் ஆண்டு க்ரீம் வண்ண குர்தா - பைஜாமாவை அவர் அணிந்திருந்தார். அதற்கு மேல் பழுப்பு நிற ஓவர் கோட் போட்டிருந்தார். மேலும், 2019ம் ஆண்டு அவர் பிரதமராகப் பதவியேற்ற போதும் கிட்டத்தட்ட 2014ல் அணிந்திருந்ததைப் போன்ற ஆடையைத் தான் அணிந்திருந்தார். வெள்ளை நிற குர்தா நீல நிற ஓவர் கோட் அணிந்து பிரதமர் மோடி 3வது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அதற்கு இணையாக கருப்பு நிற ஷூ அணிந்திருந்தார். குர்தாக்கள் மற்றும் பந்த்காலா ரக ஓவர்கோட்டுகள் மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடியின் முக்கியத் தேர்வாக விளங்குகின்றன. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்களின் போது வண்ணமயமான தலைப்பாகைகளை அணிவார் என்பது குறிப்பிடத்தக்கது.