அபுதாபியில் ஹிந்து ஆலயம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி!
Update: 2023-12-30 07:02 GMT

பிரதமர் மோடி!
ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் ஸ்வாமி நாராயண் ஸம்ப்ரதாயத்தினர் கட்டியுள்ள ஹிந்து ஆலயத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என அவ்வமைப்பின் பூஜ்ய ஸ்வாமி ஈஸ்வர சந்திர தாஸ், ஸ்வாமி ப்ரம்ம விஹாரி தாஸ் மற்றும் சில நிர்வாக இயக்குனர்கள் பிரதமர் மோடியை புதுதில்லியில் சந்தித்து வேண்டுகோள் விடுவித்தார்.
இதையேற்று பிரதமர் மோடி 2024 பிப்ரவரி 14 நடைபெற உள்ள ஆலயத் திறப்பு விழாவில் பங்கேற்க வருவதாக உறுதி அளித்துள்ளார்.