அயோத்தியில் பிரியங்கா சோப்ரா!
Update: 2024-03-20 11:41 GMT
பிரியங்கா சோப்ரா
அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, அயோத்தி நகருக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் தனது குழந்தையுடன் அயோத்தி ராமஜென்ம பூமிக்கு இன்று சென்றார்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.