லடாக்கின் 'லே' மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்!

Update: 2024-04-05 16:46 GMT

144 தடை உத்தரவு 

லடாக்கின் 'லே' மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 7-ம் தேதி இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை(LAC) நோக்கி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும், சூரியமின்சக்தி திட்டங்களுக்கான நில அபகரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் "பஷ்மினா அணிவகுப்பு" நடத்த திட்டமிடப்பட்டிருந்தது

இந்தப் பேரணி மூலம் லடாக் வாசிகள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தியா முழுவதிலும் தெரியப்படுத்தவும் நாடு முழுவதிலும் இருந்தும் ஆதரவைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் லடாக்கின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News