கோடீஸ்வரர்களுக்காக உழைக்கும் மோடி - ராகுல் காந்தி பிரச்சாரம் !

Update: 2024-04-29 06:32 GMT

ராகுல் காந்தி

ஒடிசாவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடக்க இருப்பதால் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் 21 நாடாளுமன்ற தொகுதிக்கும் 147 சட்டமன்ற தொகுதிக்கும் மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஒடிசாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, " ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளமும், பா ஜனதாவும் திருமணம் செய்து கொண்டுள்ளன. ஒன்றையொன்று எதிர்த்து தேர்தலில் களமிறங்கி இருந்தாலும் உண்மையில் அவை ஒன்றாகவே இணைந்து செயல்படுகின்றன.

ஒடிசாவில் கனிமவள முறை கேட்டில் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக், அக்கட்சியை வழிநடத்தும் அவரது உதவியாளர் பாண்டியன், மதிய அவள் துறை அமைச்சர் அமித்ஷா, நரேந்திர மோடி ஆகியோர் உங்களது வளங்களை கொள்ளையடிக்கிறார்கள்.

பிரதமர் மோடி நாட்டின் 22 கோடீஸ்வரர்களுக்கு மட்டும் தான் உழைத்து வருகிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் வழங்குவோம்.

பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2000, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3000, இலவச மின்சாரம் ரூ.500க்கு கியாஸ் சிலிண்டர் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மத்தியல் ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன் தள்ளுபடி செய்வோம்" என்று கூறினார்.

Tags:    

Similar News