வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.;

Update: 2024-12-06 05:43 GMT

சக்திகாந்த தாஸ்

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) டிசம்பர் 4ம் தேதி இரு மாதங்களுக்கு ஒருமுறை நடத்து பொருளாதார மதிப்பாய்வைத் தொடங்கியது. இன்று முடிவடைந்து நிலையில், ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் முடிவுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில்; ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. தொடர்ந்து 11வது முறையாக எவ்வித மாற்றமும் இல்லை. ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாகத் தொடர முடிவு செய்யப்பட்டது. பொதுவாக ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். ஆனால் தொடர்ந்து 11வது முறையாக ரெப்போ வட்டி மாற்றப்படாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையாது. நீண்ட காலமாக வீடு, வாகனங்களுக்கான வட்டி குறையாமல் இருப்பதும் சாமானிய மக்களுக்கு சுமைதான் என பொருளாதா நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றாமல் 6.5 சதவீதமாகவே வைத்துள்ளது. ரெப்போ விகிதம் 6.5% ஆக நிலையாக வைக்கப்பட்டுள்ளது போல், நிரந்தர வைப்பு வசதி (SDF) விகிதம் 6.25% ஆகவும், MSF மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆகவும் மாற்றமின்றி தொடர்வதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். MPC தனது நாணய கொள்கை நிலைப்பாட்டையும் நடுநிலையாக வைத்திருக்கும் என அறிவித்துள்ளது மூலம், நாட்டின் பணவீக்கம் அதன் இலக்குடன் வைத்திருப்பதில் தெளிவாக இருப்பதை காட்டுகிறது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியையும் ஆதரிக்கும் என அவர் கூறினார்.

Tags:    

Similar News