ரூ. 39 விலையில் ISD பேக் அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக சர்வதேச (ISD) ரீசார்ஜ் பேக்குகளை அறிவித்துள்ளது.

Update: 2024-10-11 14:22 GMT

ஜியோ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. சமீபத்தில் தனது ரீசார்ஜ் கட்டணங்கள் விலையை உயர்த்திய ஜியோ நிறுவனம் இடையில், புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக சர்வதேச (ISD) ரீசார்ஜ் பேக்குகளை அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்தின் புதிய ISD ரீசார்ஜ் சலுகைகளின் விலை ரூ. 39 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ. 99 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐஎஸ்டி மினிட் பேக் என அழைக்கப்படும் புதிய சலுகைகள் பயனர்களுக்கு எவ்வித கூடுதல் பலன்களும் இன்றி குறிப்பிட்ட நிமிடங்களுக்கு சர்வதேச அழைப்புகளை பேச அனுமதிக்கிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வோருக்காக இந்த ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ. 39 விலையில் கிடைக்கும் சலுகையில் 30 நிமிடங்கள் வரை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதே போன்று வங்கதேசத்திற்கு ரூ. 49 விலையில், 20 நிமிடங்கள் வரை பேசலாம். சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங் காங் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள 15 நிமிடங்களுக்கு ரூ. 49 செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு பேச 15 நிமிடங்களுக்கு ரூ. 69 செலுத்த வேண்டும். பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு அழைப்பு மேற்கொள்ள 10 நிமிடங்களுக்கு 79 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் மற்றும் பூடானுக்கு 15 நிமிடங்கள் பேச ரூ. 89 ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரூ. 99 ரீசார்ஜ் செய்யும் போது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, துருக்கி, குவைத் மற்றும் பஹ்ரைனுக்கு பத்து நிமிடங்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த பிரீபெயிட் ரீசார்ஜ்கள் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ததில் இருந்து ஏழு நாட்கள் ஆகும்.

Tags:    

Similar News